சென்னை: சமயமுரளி இயக்கத்தில் உருவாகியுள்ள கனல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜூன்.28) சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ராதாரவி மற்றும் படத்தின் நாயகி காவ்யா பெல்லு, பாடகர் வேல்முருகன், இசை அமைப்பாளர் தென்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய ராதாரவி, "ஓடிடியால் தமிழ் சினிமா கெட்டுப்போய் உள்ளது. மக்கள் பார்க்காமல் இருப்பதுதான் ஓடிடியா, மக்கள் பார்த்து கைதட்ட வேண்டும். வரும் காலத்தில் ஓடிடி உச்ச நடிகர்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்யும் நிலை வரும். நடிகர்களால் சம்பளத்தை உயர்த்திக் கேட்க முடியாது.