தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நடிகர் 'பூ' ராமு காலமானார்! - Poo Ramu

பிரபல நடிகரும், நாடக கலைஞருமான 'பூ' ராமு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.

நடிகர் ’பூ’ ராமு காலமானார்
நடிகர் ’பூ’ ராமு காலமானார்

By

Published : Jun 27, 2022, 9:21 PM IST

ஸ்ரீகாந்த், பார்வதி நடித்த 'பூ' படத்தில் தனது சிறந்த நடிப்பின் மூலம் கவனம் பெற்ற நடிகர் ராமு, இந்தப் படத்திற்கு பின்னரே 'பூ ராமு' என அழைக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து வெளியான நீர்ப்பறவை, தங்க மீன்கள், பரியேறும் பெருமாள், கண்ணே கலைமானே, பேரன்பு, கர்ணன் மற்றும் சூரரைப்போற்று ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் சிறிது நேரமே வந்தாலும் அவரது நடிப்பு பெரும்பாலானோரால் பாராட்டப்பட்டது. மேலும் கர்ணன், சூரரைப் போற்று, தங்க மீன்கள் போன்ற படங்களில் அவரது நடிப்பு வெகுவாக ஈர்த்தது. பூ ராமு, இன்று(ஜூன் 27) காலை திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் உயிரிழந்தார் என இயக்குநர் லெனின் பாரதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'அன்புத் தோழன் பூ ராமு உடலால் நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார்.. செவ்வணக்கம் தோழா…' என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:இளையராஜா இசையமைத்துள்ள ஆங்கிலத்திரைப்படத்தின் பாடல் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details