தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

விஜய்க்கு அண்ணனாகும் மைக் மோகன்..? - விஜய்க்கு அண்ணனாகும் மைக் மோகன்

நடிகர் விஜய் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து, தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். அதில் விஜய்க்கு அண்ணனாக மைக் மோகன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்க்கு அண்ணனாகும் மைக் மோகன்
விஜய்க்கு அண்ணனாகும் மைக் மோகன்

By

Published : Apr 20, 2022, 7:57 PM IST

தமிழில் கார்த்தியை வைத்து 'தோழா' படத்தை இயக்கியவர் வம்சி பைடிபள்ளி. தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் வம்சி பைடிபள்ளி தற்போது நடிகர் விஜயை வைத்து புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிறது.

இது விஜய்க்கு 66ஆவது திரைப்படம். அண்மையில் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படம் காதல், குடும்ப சென்டிமென்ட் படமாக உருவாகிறது. இந்த நிலையில் இப்படத்தில் விஜய்க்கு தந்தையாக நடிகர் சரத்குமார் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. அத்துடன் இப்படத்தில் விஜய்க்கு இரண்டு அண்ணன்கள் இருப்பதாகவும், அந்த வேடத்தில் நடிக்க 90-களில் முன்னணியிலிருந்த இரண்டு நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் அதில் ஒரு அண்ணனாக மைக் மோகன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 80-களில் வெள்ளிவிழா நாயகனாக வலம்வந்த மோகன் சமீப ஆண்டுகளில் படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் தற்போது ஹரா என்ற படத்தில் மீண்டும் நாயகனாக நடித்து வருகிறார். இவர்தான் வம்சி இயக்கும் படத்தில் விஜய்க்கு அண்ணதாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:கைதி இந்தி ரீமேக் டைட்டில் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details