சென்னை: பிக்பாஸ் பிரபலங்கள் அமீர் இயக்கத்தில், பாவனி ரெட்டி நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை மற்றும் செய்தியாளர் சந்திப்பானது சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தாகூர் ஃபிலிம் சென்டரில் நேற்று நடைபெற்றது. இந்த பூஜை நிகழ்வில் நடிகர் மன்சூர் அலிகான், தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் பல்வேறு திரைப்ரபலங்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், நான் இதுவரை 350 படங்கள் மேல் நடித்துள்ளேன் ஆனால் நான் முதல் முதலாக நடித்த தெலுங்கு திரைப்படத்தில் நானும் நடிகை சாதனாவும் இணைந்து நடித்தோம். எத்தனையோ படங்கள் நடித்தும் அது என் முதல் படம் என்பதால் அது மறக்க முடியாத அனுபவம். அமீர் என்னிடம் கதையைப் பற்றிச் சொன்னார், ஆனால் அவர் நடன வடிவமைப்பாளர் என்று சொல்லவில்லை. அமீர் நீங்கள் என்ன அவ்வளவு பெரிய பெரிய நடன இயக்குநரா, என் அளவுக்கு நீங்கள் நடனமாடுவீர்களா என்று கேட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், ”நான் தற்போது நடித்த வரும் சரக்கு படம் தமிழ்நாட்டின் அரசியலைத் திருப்பி போடும் விதமாக இருக்கும். அதை முடித்துவிட்டுத் தான் லியோ படத்தில் நடிப்பேன் எனக்கு அந்த படத்தில் அதிக நாட்கள் தேதிகள் கொடுத்துள்ளனர். நாட்டில் மிகப்பெரிய புரட்சிகள் எல்லாம் வர இருக்கிறது நாட்டின் தலைவிதியை மாற்ற யாரும் தயாராக இல்லை. அரசியல் ரீதியாகப் பின்தங்கிய நிலையில் தமிழ்நாடு மக்கள் உள்ளனர்.
அதுதான் நமக்கு முக்கியமே தவிர வேலைவாய்ப்பு இல்லாமல் தமிழக மக்கள் சிரமப்படுகிறார்கள், தமிழ்நாட்டில் தமிழன் எங்கே இருக்கிறான் என்று கூட தெரியவில்லை வட மாநிலத்தவர்கள் லாரி லாரி ஆக இல்லாமல் ரயில் ரயிலாக வந்து இறங்குகிறார்கள். இது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை எந்த இடத்திலும் தமிழர்களைப் பார்க்க முடியவில்லை தமிழர்களுக்கு என்ன ஆச்சு என்றே தெரியவில்லை அதற்கான விடை என்னுடைய சரக்கு படத்தில் இருக்கும்.