நடிகர் நாசர் திரையுலகில் அடி எடுத்து வைத்து 37 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. எந்த கதாபாத்திரங்களானாலும் விமர்சன ரீதியாகவும், மக்களாலும் பாராட்டப்படுபவர் நாசர். அந்தளவுக்கு கதாபாத்திரங்களில் ஒன்றி நடிக்கக்கூடியவர். எந்த கதாபாத்திரமானாலும் அதற்கேற்றவாறு நடிக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தார்.
இந்த ஆண்டு 37ஆவது ஆண்டில் திரைத்துறையில் அடியெடுத்து வைக்கும் நடிகர் சங்கத்தலைவர் நாசருக்கு நடிகர் சங்கப்பொருளாளர் கார்த்தி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.