தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ராஜாராஜ சோழன் விவகாரம்  தேவை இல்லாத விஷயம் - கஞ்சா கருப்பு - தயாரிப்பாளர் கே ராஜன்

கஞ்சா கருப்பு தயாரித்துள்ள ஓங்காரம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.

Etv Bharatராஜா ராஜ சோழன் இந்துவா முஸ்லிமா என்பது தேவையில்லாத விசயம்-  கஞ்சா கருப்பு!
Etv Bharatராஜா ராஜ சோழன் இந்துவா முஸ்லிமா என்பது தேவையில்லாத விசயம்- கஞ்சா கருப்பு!

By

Published : Oct 9, 2022, 7:48 AM IST

சென்னை:ஓங்காரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று(அக்-8) வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் மோகன் ஜி, நடிகர் கஞ்சா கருப்பு ஆகியோர் கலந்துக்கொண்டனர். அப்போது பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், ‘நடிகை நடிகர்களுக்காக தானே நாங்கள் சிரமப்படுகிறோம்.

நாங்கள் செய்யும் செலவு அத்தனையும் உங்களுக்குத்தான்.ஆக படத்திற்கு மரியாதை கொடுங்கள். படத்தின் நடிகையை விட நடிகையின் அம்மாதான் ரொம்ப பிரச்சினை கொடுக்கிறார்கள். நடிகையின் அம்மா தங்களது பெண்களின் கற்புக்கு மட்டுமே பாதுகாப்பு கொடுக்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் மக்கள் பணியில் சிறந்து விளங்கி வருகிறார். ஆனால் இன்னும் திரையுலகினருக்கு இன்னும் ஏதும் செய்யவில்லை. கருணாநிதி திரைத்துறைக்காக நிறைய செய்துள்ளார். ஆகவே, அவரின் மகனான நீங்கள் உதவ வேண்டும். சின்ன திரைப்படம் தான் சினிமாவை காப்பாற்றி கொண்டிருக்கிறது.

ஓங்காரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

அதன்பின் பேசிய நடிகர் கஞ்சா கருப்பு, ‘ஒரு நாள் தயாரிப்பாளராக இருந்து பாருங்கள், அப்போது தெரியும் அதன் கஷ்டம். நான் சினிமாவில் தயாரிப்பாளராக இருந்து தோல்வியடைந்த போது, எனது அம்மாவிடம் தெரிவித்தேன். அவர் நீ காசு கொடுத்து படிக்காத படிப்பை சினிமாவில் படித்துள்ளாய் என்று சொன்னார்.இன்று பிரச்சினை செய்கிறார்கள் ராஜா ராஜ சோழன் இந்துவா முஸ்லிமா என்று, எதற்கு இதெல்லாம், படத்தை எடுத்தோமா சம்பாதித்தோமா என்று இருக்கணும். அதெல்லாம் தேவை இல்லாத விஷயம்' என்றார்.

இதையும் படிங்க:தனுஷ் திரைப்பயணத்தில் திருப்புமுனையான திருச்சிற்றம்பலம்

ABOUT THE AUTHOR

...view details