நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில்,
'அன்புள்ள லோகேஷ்,
பெயருக்கு முன் ”திரு” போடாமல் விட்டது விபத்தல்ல. திரு. கனகராஜ் அவர்களுக்கு உங்கள் பால் உள்ள உரிமையை உங்களைக் கேட்காமலேயே நான் எடுத்துக்கொண்டுவிட்டேன். இது நமக்குள்ளான தனிப்பட்ட கடிதம் என்பதால், மற்றபடி உங்கள் சாதனைகளுக்கான பதவிக்கான மரியாதை உள்ளபடியே தொடரும், பொது வெளியில்.
என் ரசிகர்கள் மற்ற ரசிகர்களைவிட வித்தியாசமானவர்களாக இருப்பது அவசியம் என்ற என் ஆசை, பேராசை என்றனர், என் விமர்சகர்கள். ஆனால், அதையும் தாண்டி என் முன்னணி ரசிகர் முன்னணித் திறமையாளராகவும் இருப்பது நான் ஆசைப்பட்டதை விட அதிகம். உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று நான் உட்பட யார் சொன்னாலும் நம்ப வேண்டாம்.