தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நடிகர் கமல்ஹாசன் குணமடைந்து வீடு திரும்பினார் - இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்

உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் வீடு திரும்பினார்.

Etv Bharatநடிகர் கமல்ஹாசன் குணமடைந்து வீடு திரும்பினார்
Etv Bharatநடிகர் கமல்ஹாசன் குணமடைந்து வீடு திரும்பினார்

By

Published : Nov 25, 2022, 1:42 PM IST

சென்னை:தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கபட்டிருந்த நடிகர் கமல்ஹாசன் இன்று (நவ.25) குணமடைந்து வீடு திரும்பினார். கமல்ஹாசன் நடிகராக மட்டுமின்றி மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சி மூலம் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் நேற்று முன்தினம் (நவ.23) ஹைதராபாத் சென்று மாலையில் சென்னை திரும்பினார். அப்போது அவருக்கு லேசான சளி மற்றும் காய்ச்சல் இருந்துள்ளது.

உடனே அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லேசான காய்ச்சல் மற்றும் சளிக்கு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இரண்டு நாட்கள் அங்கு தங்கி சிகிச்சை பெற்று வந்த கமல்ஹாசன் இன்று வீடு திரும்பினார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் சில நாட்கள் ஓய்வில் இருப்பார் என்று கூறப்படுகிறது.

கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ்-6 நிகழ்ச்சியையும் தொகுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நடிகர் ஆர்.கே. வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 150 சவரன் மீட்பு

ABOUT THE AUTHOR

...view details