நடிகர் ஜீவாவின் “வரலாறு முக்கியம்” திரைப்படத்திலிருந்து ஷான் ரஹ்மான் இசையமைத்து பாடியுள்ள இரண்டாவது சிங்கிள் டிராக் - ‘மல்லு கேர்ள்’ வெளியாகி, பரபரப்பான வெற்றியைப் பெற்றுள்ளது. அனைத்து வகை ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகர் ஜீவா, தனது திரைப்படங்களின் மூலம் ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கை தருவதில் எப்போதும் தவறியதில்லை.
அவரது முந்தைய படங்களைப் போலவே, அடுத்ததாக அவரது நடிப்பில் வரவிருக்கும் 'வரலாறு முக்கியம்' படத்தின் மீதும், ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. இப்படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிள் பாடலான - 'பொத்தி பொத்தி வளத்த புள்ள', பாடல் படம் 100% குடும்பங்கள் கொண்டாடும் பொழுதுபோக்கு திரைப்படம் என்பதை, உறுதிப்படுத்துவதாக இருந்தது.
தற்போது இரண்டாவது சிங்கிளான - ‘மல்லு கேர்ள்’ பாடல், இந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான் தென்னிந்திய இசைத்துறையின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர், குறிப்பாக அவரது சார்ட்பஸ்டர் ஹிட்டான ‘ஜிமிக்கி கம்மல்’ ஒரே இரவில் வரலாறு காணாத வெற்றியடைந்தது.