தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு நாளை திருமணம்!

நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு நாளை திருவேற்காட்டில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு நாளை திருமணம்
நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு நாளை திருமணம்

By

Published : Oct 27, 2022, 10:29 PM IST

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக இருப்பவர், ஹரீஷ் கல்யாண். 'சிந்து சமவெளி' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர். அதனைத்தொடர்ந்து அவர் நடித்த பியார் பிரேமா காதல், தாராள பிரபு, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகியப்படங்கள் வெற்றிபெற்றன.

இந்நிலையில் இவருக்கும் நர்மதா உதயகுமார் என்பவருக்கும் நாளை திருமணம் நடக்க உள்ளது. இதுகுறித்து ஹரீஷ் கல்யாண் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தனது திருமணம் நாளை திருவேற்காட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடக்க உள்ளதாகவும், அதற்கு பத்திரிகையாளர்கள் அனைவரும் கண்டிப்பாக வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

மேலும் இந்த திருமணமானது பெற்றோர்களால் பெண் பார்த்து, பேசப்பட்டு, பின்பு நிச்சயிக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என்றும் தனக்கு ஆதரவு அளித்த அனைவரும் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். திருமணத்திற்குப்பிறகும் தொடர்ந்து நல்ல படங்களில் நடிப்பதை மட்டுமே கருத்தில் கொள்வேன் என்றும்;

நாளை திருமணத்திற்காக நிறைய பிரபலங்களை அழைத்துள்ளதாகவும், கமல்ஹாசன், விஜய் ஆகியோரையும் அழைத்துள்ளதாகவும், அவர்கள் திருமணத்திற்காக வருவார்கள் என்று கண்டிப்பாக நினைப்பதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க:வாரிசு படத்தின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்...!

ABOUT THE AUTHOR

...view details