நடிகர் விஜயின் 'பீஸ்ட்' படத்தைத்தொடர்ந்து ரஜினி நடிக்கும் அடுத்த திரைப்படமான 'Thalaivar 169'-ஐ இயக்கத்தயாராகி வருகிறார், நெல்சன். இப்படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். ’பீஸ்ட்’ படத்திற்கு கிடைத்த நெகடிவ் விமர்சனங்களால் ரஜினி, நெல்சன் மீது அதிருப்தியில் இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால், அதெல்லாம் கிடையாது; ரஜினியை நெல்சன் இயக்குவது உறுதி என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ரஜினியைத்தொடர்ந்து தனுஷ் நடிக்கும் படத்தை நெல்சன் இயக்க உள்ளாராம். சமீபத்தில் தனுஷை சந்தித்த நெல்சன் ஒரு புது வகையான கதையைச் சொல்லியுள்ளார். அந்தக் கதை தனுஷுக்கு பிடிச்சு போயிட்டதால், இந்தக் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.