தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

தனுஷ் பாராட்டிய காடப்புறா கலைக்குழு ட்ரெய்லர்! - director Raja Gurusamy

அறிமுக இயக்குநர் ராஜா குருசாமி இயக்கத்தில், முனீஸ்காந்த், காளி வெங்கட் நடிப்பில் கிராமத்துக் கரகாட்ட கலையின் பின்னணியில், மண் மணக்கும் படமாக உருவாகியுள்ள ‘காடப்புறா கலைக்குழு’ திரைப்படத்தின் ட்ரெய்லரை, நடிகர் தனுஷ் பாராட்டி உள்ளார்.

actor Dhanush lauds Kadappura kalaikkuzhu trailer
தனுஷ் பாராட்டிய காடப்புறா கலைக்குழு ட்ரெய்லர்!

By

Published : Jul 2, 2023, 5:45 PM IST

சென்னை:Sakti Ciinee Productions Pvt Ltd சார்பில், டாக்டர் முருகானந்தம் வீரராகவன், டாக்டர் சண்முகப்பிரியா முருகானந்தம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜா குருசாமி இயக்கத்தில், முனீஸ்காந்த், காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, கிராமத்துக் கரகாட்ட கலையின் பின்னணியில், மண் மணக்கும் படமாக உருவாகி உள்ள திரைப்படம் ‘காடப்புறா கலைக்குழு’. வரும் ஜூலை 7அன்று திரைக்கு வர உள்ள இப்படத்தின் பத்திரிகை ஊடகவியலாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகர் காளி வெங்கட் பேசியதாவது, ''எனக்கு இது மிக முக்கியமான படம், இயக்குநர் குறும்படம் எடுத்த காலத்தில் இருந்தே எனக்குப் பழக்கம். ராஜா குருசாமி எனக்கு நெருங்கிய நண்பர். அவர் படம் செய்தது எனக்கு மகிழ்ச்சி. அவருக்குப் படம் தந்ததற்காகத் தயாரிப்பாளருக்கு நன்றி.

தயாரிப்பாளர் புரொடக்சனில் தேவைப்படும் அத்தனையும் வாங்கி வைத்து விட்டார். கண்டிப்பாகத் தொடர்ந்து படம் எடுப்பார். அவருக்கு எனது வாழ்த்துகள். ஹென்றி மிக எளிமையாக அனைவருக்கும் பிடிக்கும்படி இசையமைத்து உள்ளார். இந்தப்படத்தில் முனீஷ்காந்த் இங்கு ஆடியதை வீடியோவில் பார்த்தேன் அவருடன் தொடர்ந்து பணியாற்றுவது மிக மகிழ்ச்சி. லொகேஷனில் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்தார்கள். அவருக்கு நன்றி. தனுஷ் இந்தப்படத்தின் டிரெய்லர் பார்த்துப் பாராட்டினார். உங்களுக்கும் படம் பிடிக்கும். நன்றி' என்று பேசினார்.

இயக்குநர் ராஜா குருசாமி பேசியதாவது, 'முதலில் என் தயாரிப்பாளர் இல்லாமல் நான் இல்லை , அவருக்கு நன்றி. படக்குழு அனைவருக்கும் நன்றி. எனக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்து உள்ளீர்கள், முகச்சுளிப்பு இல்லாமல் இரத்தக் காட்சிகள் இல்லாமல், குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படமாக இந்தப் படம் இருக்கும். நீங்கள் பார்த்து விட்டு உங்கள் ஆதரவைத் தர வேண்டும் நன்றி' என்றார்.

நடிகர் முனீஸ்காந்த் பேசியதாவது, 'இந்தப் படம் முண்டாசுப்பட்டி படம் போன்று ஒரு குழுவாகச் சேர்ந்து உருவாக்கி உள்ளோம். அனைவரும் இணைந்து கலகலப்பாகப் படப்பிடிப்பை நடத்தினோம். இயக்குநர் பெரும் உழைப்பைக் கொடுத்து உள்ளார். இந்தப் படத்தின் மீது மிகவும் நம்பிக்கை வைத்து இரவு பகல் பாராமல் இந்தப் படத்தை உருவாக்கி உள்ளார். இப்படி ஒரு கலைப் படைப்பை உருவாக்கி உள்ள தயாரிப்பாளருக்கு நன்றி. நான் இந்தப் படத்தில் கரகாட்டம் ஆட முயற்சி செய்து உள்ளேன். அது எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. படம் கண்டிப்பாக வெற்றியடையும். வாழ்த்துகள்' என்றார்.

இதையும் படிங்க: Raashi khanna: "அடி செக்கச் சிவந்த அழகே" நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details