தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

Dhanush in Tirupathi:இதுவரை இல்லாத புது லுக்கில் தனுஷ்; திருப்பதியில் மொட்டை அடித்து தரிசனம்! - நடிகர் தனுஷ் திருப்பதியில் சாமி தரிசனம்

நடிகர் தனுஷ் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மொட்டை அடித்து சாமி தரிசனம் செய்தார். அவர் மொட்டை தலையுடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Actor Dhanush had darshan at tirupati temple and he is seen in a new look with a bald head
Actor Dhanush had darshan at tirupati temple and he is seen in a new look with a bald head

By

Published : Jul 3, 2023, 1:48 PM IST

சென்னை:நடிகர் தனுஷ் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். மேலும் இவர் தெலுங்கு, ஹிந்தி போன்ற பிற மொழிப் படங்களிலும் ஹாலிவுட்டிலும் பிஸியாக நடித்து வருகிறார். ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

நீண்ட தாடியுடனும், நீண்ட முடியுடனும் தனுஷ் இடம் பெற்றிருக்கும் அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. நீண்ட நாட்களாக இந்தப் படத்திற்காக நடிகர் தனுஷ் நீண்ட தலை முடியுடனும் தாடியுடனும் காட்சி அளித்து வந்தார். இந்நிலையில் படத்தில் அவரது தோற்றம் வெளியானதால் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

மேலும் நடிகர் தனுஷ் மீண்டும் ஹிந்தியில் தான் நடிக்க உள்ள படம் குறித்து சமீபத்தில் தெரிவித்து இருந்தார். ஏற்கனவே இவரை வைத்து ஹிந்தியில் ராஞ்சனா படத்தை இயக்கி இருந்த ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மெய்ன் என்னும் படத்தில் நடிக்க உள்ளதாக குறிப்பிட்டு இருந்தார்.

சமீபத்தில் அவரது நடிப்பில் தமிழில் வாத்தி எனவும்; தெலுங்கில் சார் எனவும் வெளியான படம் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது. இதனால் அவருக்கு தெலுங்கு திரையுலகிலும் நல்ல மார்க்கெட் ஏற்பட்டு உள்ளது. மேலும் தனுஷ் சமீபத்தில் சென்னை போயஸ் கார்டனில் புதிதாக வீடு ஒன்றினைக் கட்டி குடியேறி இருந்தார்.

இதையும் படிங்க: தனுஷின் “கேப்டன் மில்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.. உற்சாகத்தில் ரசிகர்கள்..

படங்களில் நடிப்பதில் பிஸியாக இருந்தாலும் ஆன்மிகத்திலும் நாட்டம் கொண்டிருந்தார், தனுஷ். படப்பிடிப்புகளுக்கு இடையிலும் நேரம் கிடைக்கும் சமயங்களிலும் புகழ்பெற்ற கோயில்களில் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வருவார். இந்நிலையில் நடிகர் தனுஷ் இன்று திருப்பதியில் உள்ள ஏழுமலையானை தரிசித்து விட்டு மொட்டை அடித்து உள்ளார்.

தற்போது நடிகர் தனுஷ் மொட்டை தலை உடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷ் நீண்ட நாள் வேண்டுதல் காரணமாக மொட்டை அடித்து உள்ளாரா, அல்லது கேப்டன் மில்லர் படத்திற்காக நீண்ட முடியினை வளர்த்த அவர், படப்பிடிப்பு முடிவடைந்து அதற்காக மொட்டை அடித்து உள்ளாரா என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்.

பல்வேறு படங்களில் பலவித தோற்றங்களில் காணப்பட்ட நடிகர் தனுஷ் தற்போது முதல் முறையாக மொட்டைத் தலையுடன் காணப்படுவதால் அவரது புது லுக்கை பகிர்ந்து அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தனுஷ் பாராட்டிய காடப்புறா கலைக்குழு ட்ரெய்லர்!

ABOUT THE AUTHOR

...view details