சென்னை: தமிழ் சினிமாவில் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமானவர், போண்டா மணி. வடிவேலு உடன் இணைந்து இவர் நடித்த காமெடி காட்சிகள் இப்போது வரையிலும் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்நிலையில் இவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதுகுறித்து நடிகர் பெஞ்சமின் வீடியோ வாயிலாக உதவிகேட்டுள்ளார். அதில் நண்பர் போண்டா மணியின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன. இதனால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.