நடிகர் அசோக் செல்வன் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார். இவரது நடிப்பில் வெளியான நித்தம் ஒரு வானம் திரைப்படம் நல்லவரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் குரைக்கும் நாய்களை கண்டுகொள்ளாதீர்கள் முன்னேறி செல்லுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.
சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் இந்தாண்டு அதிக தோல்விப் படங்களை கொடுத்தவர்கள் யார் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் 5 படங்கள் தோல்வி கொடுத்ததாக அசோக் செல்வன் முதலிடத்தில் உள்ளார். அதனை தொடர்ந்து தலா 3 படங்கள் உடன் சசிகுமார் மற்றும் அதர்வா உள்ளனர்.