தமிழ்நாடு

tamil nadu

ஆர்யா - முத்தையா இணையும் படத்திற்கு வித்தியாசமான தலைப்பு!

By

Published : Dec 10, 2022, 10:53 PM IST

முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிக்கும் திரைப்படத்தின் கிராமத்து கெட்அப்பில் டைட்டிலுடன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

Etv Bharat
Etv Bharat

இயக்குநர் முத்தையா மண்வாசனையுடைய படங்களை கமர்ஷியல் கலந்து இயக்குபவர். இவரது இயக்கத்தில் கடைசியாக கார்த்தி நடித்த விருமன் திரைப்படம் வெற்றி பெற்றது. இவர் அடுத்து ஆர்யாவை வைத்து இயக்கி வருகிறார்.

இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் டிரம்ஸ்டிக் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக வெந்து தணிந்தது காடு ப்ட கதாநாயகி சித்தி இத்னானி நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்

இந்நிலையில் இன்று இப்படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. படத்திற்கு ‘காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ என்று வித்தியாசமான பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் முத்தையா படத்திற்கே உண்டான லுக்குடன் ஆர்யா அமர்ந்திருக்கிறார். இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:’தளபதி 67’ல் பிரியா ஆனந்த்?

ABOUT THE AUTHOR

...view details