கோவை:விருமன் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் முத்தையா "காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்" என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தில் நாயகனாக ஆர்யாவும், நாயகியாக 'வெந்து தணிந்தது காடு' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை சித்தி இதானியும் நடித்துள்ளனர்.
அதோடு, நடிகர்கள் பிரபு, பாக்யராஜ், சிங்கம் புலி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியானது. படம் வரும் ஜூன் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், "காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்" திரைப்பட குழுவினரான ஆர்யா மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் இன்று(மே.28) கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய நடிகர் ஆர்யா, "படத்தில் மண், நன்றி, குடும்பம் என பல்வேறு விஷயங்களை முத்தையா, அவர் பாணியில் கூறியிருக்கிறார். இது ஒரு கமெர்சியல் பொழுதுபோக்கு ஆக்சன் திரைப்படம்" என்று கூறினார்.
படத்தில் வைக்கப்பட்டுள்ள 'அல்லாஹ்வும் ஐய்யனாரும் ஒன்னு, அதை அறியாதவர்கள் வாயில் மண்ணு' என்ற வசனம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஆர்யா, "மத நல்லிணம் இல்லாத சூழல் உருவாகி வருகிறது. இந்த சமயத்தில் இது போன்ற வசனங்கள் தேவை என நான் நினைக்கிறேன். படத்தில் அந்த வசனம் வைத்ததற்கான காட்சிகள் இருக்கும்" என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்த படத்தில் இடம் பெறும் ரஜினிகாந்த் தொடர்பான போஸ்டர், பாட்டு ஆகியவை உற்சாகத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. படத்திற்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. எனக்கு கிராமத்து ஆக்சன் கதையில் நடிக்க வேண்டும் என நீண்ட நாள் ஆசை இருந்தது.