சென்னை : அருண் விஜய் நடிப்பில், அறிவழகன் இயக்கியுள்ள 'தமிழ் ராக்கர்ஸ்' இணையத்தொடர் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இதன் செய்தியாளர் காட்சி நேற்று திரையிடப்பட்டது.
அப்போது பேசிய அருண் விஜய், தமிழ் ராக்கர்ஸ் போன்ற பைரஸிகளால் திரைத்துறை எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்று அனைவருக்கும் தெரியும். இப்படத்தை பார்க்கும் மக்கள் இனிமேல் பைரஸிக்கு ஆதரவு தரமாட்டார்கள். திருட்டுத்தனமாக படத்தை பார்க்கக்கூடாது என்ற எண்ணத்தை இது உருவாக்கும் என்றார்.
தமிழ் ராக்கர்ஸ்’ தொடர் பைரஸி சைபர் க்ரைம் பின்னால் இருக்கும் இருள் பக்கங்களை காட்சிப்படுத்தும் ஒரு க்ரைம் தொடராகும். பைரஸியுடனான திரைத்துறையின் போரை இந்தத் தொடர் விவரிக்கிறது.
இந்தத்தொடரில் நடிகை வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், வினோதினி வைத்தியநாதன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அறிவழகன் இயக்கும் இந்தத் தொடரை, மனோஜ் குமார் கலைவாணன் எழுத, புகழ்மிகு ஏவிஎம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இதையும் படிங்க ;AK61 அப்டேட்...மீண்டும் விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பு