ஹைதராபாத்:மலையாள சினிமாவில் பல்வேறு படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் அபர்ணா நாயர். அபர்ணா நாயர் தனது அபார நடிப்பு மூலம் மலையாள ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். நடிகை அபர்ணா 2005ஆம் ஆண்டு மயூகம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு ரன் பேபி ரன், செகண்ட்ஸ், அச்சயன்ஸ், மேகதீர்த்தம், முடுகாவ், கார்ட் சமக்ஷம் பாலன் வகில், கல்கி உள்ளிட்ட படங்களிலும் சந்தனமழா, அத்மசகி ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை அபர்ணா நாயர் திருவனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டில் நேற்று இரவு இறந்து கிடந்துள்ளார். அப்போது அவரது தாயாரும் சகோதரியும் வீட்டில் இருந்துள்ளனர். அபர்ணா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கரமனா பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.