சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் "துணிவு" என்ற படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். இந்தப் படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படம் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள "சில்லா சில்லா" பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து கடந்த 18ஆம் தேதி "காசேதான் கடவுளடா" என்ற பாடல் வெளியானது.