சென்னை:நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 85.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர், நடிகர் அஜித்குமார். எந்தவொரு பின்னணியும் இல்லாமல் திரைத்துறையில் நுழைந்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். அவருக்கு தீவிரமான ரசிகர்கள் படை உள்ளது.
இவரும் நடிகை ஷாலினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். அஜித்தின் அப்பா சுப்பிரமணியம் அம்மா மோகினி. இந்த நிலையில் அஜித்தின் அப்பா சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்துள்ளார். கடந்த 4 நான்கு ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்த, நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் இன்று அதிகாலை சுமார் 4:30 மணியளவில் சென்னை கடற்கரை சாலை - ஈஞ்சம்பாக்கம் பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். இதனால், அவரது இல்லத்தைச் சுற்றி போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, இன்று காலை பெசன்ட் நகர் மின் மயானத்தில் சுப்ரமணியம் அவர்களின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது. தந்தையின் இறுதிச்சடங்குகளை, அஜித்தின் அண்ணனான அனுப் குமார் செய்கிறார். இந்நிலையில் தனது தந்தையின் மறைவு குறித்து அஜித் மற்றும் அவரது சகோதர்களான அனுப் குமார் மற்றும் அனில் குமார் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
''எங்களது தந்தையார் திரு. பி.எஸ்.மணி(85 வயது) அவர்கள் பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கறையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
தங்களது தந்தை பெருவாழ்வு வாழ்ந்திருக்கிறார். ஒரு நல்ல வாழ்க்கையினையும், எனது தாயுடன் கிட்டத்தட்ட 60 ஆண்டுகால இல்லறவாழ்க்கையிலும் அன்புடன் வாழ்ந்து மறைந்திருக்கிறார்.