நடிகர் அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 'AK61' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக அஜித் நீண்ட தாடி வளர்த்துள்ளார். அதன் புதிய லுக் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
AK Latest click: வைரலாகும் அஜித் குமாரின் புதிய புகைப்படம் - ak new look
நடிகர் அஜித்துடன் ஆதி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
![AK Latest click: வைரலாகும் அஜித் குமாரின் புதிய புகைப்படம் வைரலாகும் AK -ஆதியின் சமீபத்திய புகைப்படம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-15275060-thumbnail-3x2-ak.jpg)
இந்நிலையில், நடிகர் ஆதி, அஜித்தை சமீபத்தில் சந்தித்துள்ளார். ஆதிக்கும் நடிகை நிக்கி கல்ராணிக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர். இதற்காக அஜித்தை சந்தித்து தனது திருமணத்திற்கு ஆதி அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அஜித்தின் லுக்கை பார்த்த ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அரபு நாட்டின் முதல் பெண் இயக்குநர் படத்திற்கு இசை அமைக்கும் ஏ.ஆர். ரஹ்மான்!