பெங்களூரு:தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் ஆக்ஷன் கிங் அர்ஜூன். அதிரடி சண்டை காட்சிகள் அதிகம் இடம்பெறும் அவரது படத்துக்கு தனி ரசிகர்கள் உண்டு. நடிகராகவும், இயக்குநராகவும் முத்திரை பதித்த அர்ஜூன், தற்போது கதாசிரியர் அவதாரம் எடுத்துள்ளார். கன்னடத்தில் துருவா சார்ஜா நடித்துள்ள மார்டின் திரைப்படத்துக்கு அவர் கதை எழுதியுள்ளார்.
நடிகர் துருவா சார்ஜா, அர்ஜூனின் உறவினர் ஆவார். அவரது நடிப்பில் ஏ.பி.அர்ஜூன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மார்டின். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா கடந்த 23ம் தேதி பெங்களூருவில் நடைபெற்றது. விழாவில் படத்தின் கதாசிரியர் அர்ஜூன், தயாரிப்பாளர் உதய் மேத்தா, இயக்குநர் ஏ.பி.அர்ஜூன், நாயகன் துருவா சார்ஜா, நாயகி வைபவி சாண்டில்யா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.