தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'செல்வாக்கு உள்ளவர்களுக்கே இங்கு ஏணி கிடைக்கிறது..!' - ஆதங்கத்தில் ஆத்மிகா - ஆத்மிகா திரைப்படங்கள்

நடிகை ஆத்மிகா கோலிவுட்டில் நெப்போட்டிசம் இருப்பதாக சொல்வது போல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

’செல்வாக்கு உள்ளவர்களுக்கே இங்கு ஏணி கிடைக்கிறது..!’ - ஆதங்கத்தில் ஆத்மிகா
’செல்வாக்கு உள்ளவர்களுக்கே இங்கு ஏணி கிடைக்கிறது..!’ - ஆதங்கத்தில் ஆத்மிகா

By

Published : Aug 5, 2022, 5:53 PM IST

'மீசைய முறுக்கு' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை ஆத்மிகா தனது ட்விட்டர் பக்கத்தில், “செல்வாக்கு உள்ளவர்களுக்கு இங்கு ஏணி கிடைப்பதைப் பார்க்க முடிகிறது. மற்றவர்களுக்கு அது கிடைப்பதில்லை. பாத்துக்கலாம்..!” எனப் பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்த ட்வீட் தற்போது அடுத்தடுத்து பெரிய ஹீரோ படங்களில் நடிப்பதற்கு புக் ஆகும் இயக்குநர் சங்கரின் மகள் அதிதி சங்கரைத் தான் குறிப்பிடுவதாக இவரின் பதிவின் கீழே நெட்டிசன்கள் பேசி வருகின்றனர். ஏற்கெனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்திற்குப் பிறகு இந்த ’நெப்போட்டிசம்’ எனும் வார்த்தை அதிகமாக பயன்படுத்தப்பட்டது.

தற்போது கோலிவுட்டில் நெப்போட்டிசம் பரவுகிறதா என ரசிகர்கள் ஒரு பக்கம் பேசிக்கொள்கையில், மறுபக்கம் தமிழ் ரசிகர்கள் எப்போதும் திறமைக்கே மதிப்பளிப்பார்கள் எனப் பேசுகின்றனர். நடிகை ஆத்மிகா, குறும்படங்கள் பலவற்றில் நடித்து அதன் பின்னர் 'ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் 'மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

ஆனால், அதன்பின்னர் இவர் நடித்த படங்கள் பெரிதாக ஹிட் ஆகாததால் பெரிய வாய்ப்பு கிடைக்காமல் ஜொலிக்கமுடியாது போனார். மேலும், அதற்கடுத்து இவர் நடித்த ’நரகாசூரன்’, ‘காட்டேரி’ ஆகிய படங்கள் திரையில் வெளிவராமல் கிடப்பிலும் போயின. நடிகர் விஜய் ஆண்டனியுடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்த ‘கோடியில் ஒருவன்’ திரைப்படமும் சமீபத்தில் வெளியாகி பெரியளவில் வெற்றியடையாமல் போனதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பல தடைகளை தாண்டி வெளியானது அதர்வாவின் குருதி ஆட்டம்!

ABOUT THE AUTHOR

...view details