தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

எஸ்.ஜே.சூர்யாவிற்கு ரெட் கார்டா..? : சவால்விடும் எஸ்.ஜே.சூர்யா..! - எஸ்ஜே சூர்யா படம்

இயக்குநர் மற்றும் நடிகரான எஸ்.ஜே.சூர்யாவிற்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு போடவிருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எஸ்.ஜே.சூர்யாவிற்கு ரெட்கார்டா..? : சவால்விடும் எஸ்.ஜே.சூர்யா..!
எஸ்.ஜே.சூர்யாவிற்கு ரெட்கார்டா..? : சவால்விடும் எஸ்.ஜே.சூர்யா..!

By

Published : May 26, 2022, 7:04 PM IST

நடிகர் மற்றும் இயக்குநரான எஸ்.ஜே.சூர்யாவிடம் ஒரு தயாரிப்பாளர் தான் பல ஆண்டு கொடுத்த அட்வான்ஸை வட்டியுடன் தருமாறு கேட்டதாகவும், அதைத் தர மறுத்த எஸ்.ஜே.சூர்யா மீது ரெட் கார்டு போடும் அளவுக்கு திட்டம் தீட்டியுள்ளதாகவும் திரையுலக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2014ஆம் ஆண்டு நடிகர் பவன் கல்யாணை வைத்து ஒரு தெலுங்கு படம் எடுப்பதற்காகத் தயாரிப்பாளர் ஒருவர் இவருக்கு ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸ் தந்துள்ளார். அந்தப் படம் எடுக்கமுடியாமல் போனது. இடையில் பிசியான நடிகராகவும் மாறிவிட்டார் எஸ்.ஜே.சூர்யா. இதனையடுத்து, ஒருமுறை ”இந்த அட்வான்ஸை திருப்பித் தந்து விடவா..?” என்று கூட எஸ்.ஜே.சூர்யா கேட்டுள்ளாராம்.

ஆனால், அதை மறுத்த அந்தத் தயாரிப்பாளர், தற்போது காலம் கடந்த பின் வட்டியுடன் சேர்த்து அந்தத் தொகையைத் திருப்பித் தர கேட்டுள்ளார். தரவில்லையெனில், தயாரிப்பாளர் சங்கத்திடம் முறையிட்டு ரெட் கார்டு போட்டு நடிக்கத் தடை செய்யவும் முயன்று வருகிறாராம்.

இதையறிந்த எஸ்.ஜே.சூர்யா, ”நான் டீக்கடை வைத்து கூட பிழைத்துக் கொள்வேன்... ஆனால் என்னிடம் கொடுத்த தொகையை விட ஒரு பைசா கூட அதிகமாக காசு வாங்கிவிட முடியாது” என சவால் விட்டுள்ளாராம்.

இதையும் படிங்க: 'என் படத்தின் வசூலைத் துரத்திய பக்திப் படம்..!' - கமல்ஹாசன்

ABOUT THE AUTHOR

...view details