சென்னை:நடிகர் அஜித் குமார் சமீபத்தில் லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’ என்ற படத்தில் நடிக்கவிருந்தார். அந்தப் படம் முடிந்த பின்னர் தான், உலக சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்போவதாகவும் அறிவித்திருந்தார்.
ஆனால், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தாமதமான நிலையில், நடிகர் அஜித் குமார் நேபாளம் வழியே பூடான் நாடுகளில் உலக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு, அவ்வப்போது எடுக்கும் புகைப்படங்களையும் அவரது மேனேஜர் மூலம் பகிர்ந்து வந்தார். மேலும் அஜித் குமார் பயணித்த வழித்தடத்தையும் வரைபடமாகப் பகிர்ந்தார். அதில், தமிழ்நாட்டில் இருந்து தெலங்கானா, மகாராஷ்ட்ரா, கொல்கத்தா, ராஜஸ்தான், புது டெல்லி என பயணித்து பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார்.
அந்தப் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது ‘விடா முயற்சி’ திரைப்படம் விரைவில் துவங்கவுள்ள காரணத்தால் அவர் சென்னைக்குத் திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது பயணம் குறித்து ரசிகர்களுக்கும், பைக் ரேஷர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அஜித் குமார் தனிப்பட்ட முறையில் வெளியிடும் அறிவிப்பு; “இந்த மேற்கோளை நான் நீண்ட காலமாக விரும்பி வாழ்ந்து வருகிறேன். அதாவது, 'வாழ்க்கை ஒரு அழகான பயணம். அதன் எதிர்பாராத தருணங்கள், திருப்பங்கள் மற்றும் திறந்த பாதைகளைக் கொண்டாடுங்கள்'.
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெளிப்புறங்களில் எனது ஆர்வத்தை ஒரு தொழில்முறை முயற்சியாக மாற்றும் விதத்தில் ஏகே மோட்டோ ரைடு (AK Moto Ride) என்ற மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை கொண்டு வந்திருக்கிறேன் என்பதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.