இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், நடிகைகள் த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட மாபெரும் பட்டாளங்கள் நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன் -1' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியான இந்த படம் தற்போதும் பல்வேறு இடங்களில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படம் உலகளவில் தற்போது 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதால் அண்மையில் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குனர் மணிரத்தினம், நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
பொன்னின் செல்வன் திரைப்படம் இயக்குனர் மணிரத்னத்திற்கு பெருமை சேர்த்ததோ இல்லையோ நடிகை த்ரிஷாவுக்கு பெரும் விளம்பரத்தை தேடித் தந்தது. அந்த அளவுக்கு பொன்னியின் செல்வன் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் அணிந்து வந்த ஆடைகள், அவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
'96' வெற்றிக்கு பிறகு 'பொன்னியின் செல்வன் பாகம்-1' த்ரிஷாவுக்கு பெரும் புகழை தேடித் தந்தது. இணையத்தில் ரசிகர்களின் அன்பு மழையில் த்ரிஷா நனைந்து வருகிறார். டிவிட்டரில் குந்தவையாக பெயரை மாற்றிய த்ரிஷா குந்தவையாகவே வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது அவர் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ சுமார் 2 வயது குழந்தை ஒன்று ஒரு பெண்ணின் இடுப்பில் அமர்ந்தவாறு விளம்பர பேனரில் உள்ள த்ரிஷாவின் புகைப்படத்திற்கு முத்தம் கொடுக்கிறது. இதனை புன்னகையுடன் த்ரிஷா பகிர்ந்துள்ளார்.