தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி பற்றிய படம் எனது இயக்கத்தில் வரும் - மோகன் ஜி - பகாசூரன் திரைப்பட அப்டேட்

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி பற்றிய படம் கண்டிப்பாக எனது இயக்கத்தில் வரும் என இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி பற்றிய படம் எனது இயக்கத்தில் வரும் - மோகன் ஜி
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி பற்றிய படம் எனது இயக்கத்தில் வரும் - மோகன் ஜி

By

Published : Feb 13, 2023, 7:52 PM IST

சென்னை: இயக்குநர் மோகன் இயக்கத்தில் செல்வராகவன் நடித்துள்ள பகாசூரன் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் நடிகர் செல்வராகவன், ராதா ரவி, நட்ராஜ், கே. ராஜன் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய நடிகர் ராதாரவி, 'டப்பிங் பார்த்தேன். பாடலை பார்த்தேன். செல்வராகவன் தன்னுடைய உயிரை விட்டு நடித்துள்ளார். He has lived in the கேரக்டர் எனச் சொல்வார்கள். ரொம்ப நாள் கழித்து அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார், செல்வராகவன். என்னுடன் நாயகி நடித்த சில காட்சிகளை பார்த்தேன். அப்படியே கலங்கி விட்டேன். ஆரம்பத்தில் நான் இந்த படத்தில் நடிப்பதாக இல்லை. உங்களுக்கு ருத்ர தாண்டவம் படத்தில் நல்ல கதாபாத்திரம் கொடுத்துள்ளேன். இதில் எப்படி என இயக்குநர் கேட்டார். நான் ஆரம்பித்தது வில்லன் கதாபாத்திரம் தான். பிறகு தான் நல்ல வேடங்கள் செய்தேன் என இயக்குநரிடம் சொன்னேன். பகாசூரன் படத்தில் தான் நீண்ட நாட்கள் கழித்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அந்த அளவிற்கு பண்ணியுள்ளேன். இயக்குநருக்கு வருத்தம் தான், இந்த கேரக்டர் நான் பண்ணியுள்ளேன் என்பதால்.... நான் செய்தால் தான் அது சிறப்பாக இருக்கும்.

மோகன் ஒரு அற்புதமான கருவை எடுத்துள்ளார். அவருக்கு சமூகத்தின் மீது அக்கறை உள்ளது. ருத்ர தாண்டவம் படத்தில் அம்பேத்கர் சாதி தலைவர் கிடையாது; பொது தலைவர் என்று சொன்னார். நான் தான் அந்த வசனத்தை பேசி உள்ளேன். இந்த படத்தில் நடித்த எங்கள் இயக்குநர் செல்வராகவனுக்கு சிறந்த நடிகர் என்ற பட்டம் கிடைக்கும். அப்படி நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு எனக்கு பிடித்த கதாபாத்திரம் இது தான்’ என்றார்.


இப்படம் குறித்து தயாரிப்பாளர் தேனப்பன் கூறுகையில், 'பகாசூரன் படத்திற்கு பெரிய ஆதரவு தர வேண்டும். இந்த படம் பா.ரஞ்சித்துக்கு எதிரானது தான். பா. ரஞ்சித்துக்கு அவ்வளவு ஆதரவு தரும்போது ஏன் மோகனுக்கு ஆதரவு தரக்கூடாது. இது சமூகத்திற்கு தேவையான ஒரு படம். எல்லோரும் ஆதரவு தர வேண்டும். மோகன் பெரிய இயக்குநர் ஆவார்.

ரெட் ஜெயன்ட் யாரையும் மிரட்டி எல்லாம் வாங்கவில்லை. நான் சினிமாவிற்கு வந்து 38 ஆண்டுகள் ஆகிறது. 38 வருடங்களில் எத்தனை படம் சில்வர் ஜூப்ளி பார்த்து இருப்போம். ஏதாவது படத்தின் நம்பர் தெரியுமா. கடைசியாக லவ் டுடே 29 கோடி ஷேர் வந்துள்ளது.
பொன்னியின் செல்வன் 123 கோடி தமிழ்நாட்டில் வந்துள்ளது. விக்ரம் படத்திற்கு 98 கோடி போய் கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவில் இத்தனை ஆண்டில் எத்தனை நம்பர் நாம் பார்த்துள்ளோம். இதே வேறு ஒருவருடன் போய் இருந்தால் இவ்வளவு வந்திருக்குமா. ரெட் ஜெயன்ட் உண்மையில் 5 சதவீதம் தான் வாங்குகிறார்கள். ரூ.1 கோடி வந்தால் அவர்களுக்கு ரூ.5 லட்சம் தான் கிடைக்கும். நான் திமுக, அதிமுக கிடையாது. சினிமாவில் இருந்து சொல்கிறேன். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்பெனி கூடும் அளவிற்கு அங்கு இல்லை. வேறு மாதிரி தான் இருக்காங்க. மக்களிடம் உண்மையைச் சொன்னால் யாரும் நம்புவதில்லை. அவர்களும் சினிமாவிற்கு உதவி தான் செய்கின்றனர்.
இத்தனை ஆண்டுகளில் யார் உண்மையை சொன்னது. எல்லாரும் மாஃபியா கும்பல் தான். தமிழ்நாட்டில் உள்ள விநியோகிஸ்தர்கள் எல்லாம் மாஃபியா கும்பல் தான். ஒருவர் கூட பணம் வரவில்லை என்று தான் சொல்கின்றனர். நிச்சயமாக சினிமா நன்றாக இருக்க வேண்டும் என்றால் ரெட் ஜெயன்ட் போன்ற சிலர் இருக்க வேண்டும். தரமான படம் எடுங்கள். கண்டிப்பாக நல்ல ஷேர் வரும்’ என்றார்.

இப்படம் குறித்து தயாரிப்பாளர் கே. ராஜன் தெரிவிக்கையில், 'வழக்கமான குடும்ப கதைகளை எடுத்து ஓட வைப்பது நமது மோகன் இல்லை. திரவுபதி, ருத்ர தாண்டவம் வித்தியாசமாக பேசப்பட்டது. அதில் புரட்சி கருத்து இருந்தது. என்னை சிறப்பாக நடிக்க வைத்துள்ளார். நான் இப்படி நடித்தது இல்லை. தயாரிப்பாளர் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என தினமும் வேண்டிக் கொண்டு உள்ளேன்.
கலைஞர் நிறைய நல்லது செய்துள்ளார். சினிமாக்காரன் என்றால் உடனே நேரம் கொடுப்பார். நீங்கள் சொன்னால் அப்பாவும் செய்வார்; நீங்களும் அதற்கு உதவியாக இருக்க வேண்டும் என உதயநிதியிடம் சொன்னேன். பகாசூரன் படம் சிறப்பாக இருப்பதாக உதயநிதி சொன்னார். நான் தான் இந்தப் படத்தை வெளியிட வேண்டும் எனக் கேட்டேன்.
அவர் ஒரு குழு வைத்துள்ளார். அவர்கள் படம் பார்த்து தான் படத்தை வாங்குவார்கள். அதனால் இயக்குநரிடம் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என சொன்னேன். எங்கள் வீட்டுப்பிள்ளை மோகன் ஜி.
இந்த படத்தை ரெட் ஜெயன்ட் தான் வெளியிடுகிறது. ரெட் ஜெயன்ட் நல்ல திரையரங்கு கொடுக்கிறார்கள். அதனுடன் சதவீதம் கூட கிடைக்கிறது. மற்றவர்கள் 60, 65 கொடுத்தால், ரெட் ஜெயன்ட் 70 சதவீதம் கொடுக்கிறார்கள். இது தயாரிப்பாளர்களுக்கு லாபம் தான். அவர்கள் யாரையும் மிரட்டவில்லை. சவுக்கு சங்கர் அவர்களுக்கு சினிமா பற்றி தெரியாது. யாரோ எழுதி கொடுப்பதை அவர் பேசுகிறார். சவுக்கு சங்கர் சொன்னதில் உண்மை இல்லை.
’வாத்தி’ படத்தை மிரட்டி வாங்கி இருக்கலாமே. ஆனால் வாங்கவில்லை. தவறான செய்திகளை பரப்ப வேண்டாம். சினிமா பற்றி தவறாக சொல்லி யாருக்கும் கெட்ட பெயரை உண்டாக்க வேண்டாம்’ என்றார்.


பகாசூரன் படத்தின் இயக்குநர் மோகன் ஜி கூறுகையில், 'மிகப்பெரிய ஜாம்பவான்கள், இயக்குநர்கள் உடன் வேலை செய்துள்ளேன். இதற்கு முன்பு விளையாட்டாக நிறைய பண்ணி இருக்கலாம். ஆனால், இதன் பிறகு சமூக அக்கறை உள்ள படங்களை பண்ண வேண்டும் என்ற பொறுப்பு உள்ளது’ என்றார்.

பகாசூரன் படத்தின் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். தெரிவிக்கையில், 'ஒரு விழாவில் என்னை பார்த்து ஒரு வயதானவர், என் அப்பன் அல்லவா பாடலை பார்த்து நீயும் இதை போல் நல்ல பாடலை கொடு என்று சொன்னார். நான்தான் அந்த பாடலை பாடி இசையமைத்தேன் என்று சொன்னேன். அவர் நம்பவில்லை. காரணம் நான் கிறிஸ்தவர் என்பதால். நான் இசையை இசையாக மட்டும் தான் பார்க்கிறேன்.
இந்தப் படத்தில் நான் வேலை செய்ய ஒப்புக்கொண்ட பிறகு, என் சாதி என்னவென்று நிறைய பேர் தேடியிருக்கிறார்கள். தயவு செய்து அதை தேடாதீர்கள். நான் அதற்கு முற்றிலும் எதிரானவன்’ என்றார்.

படத்தில் நடித்த நடிகர் நட்ராஜ் பேசியபோது, 'இந்த காலத்தில் பெண் பிள்ளைகளுக்கு நடக்கும் கொடுமைகளை பற்றி பேசியுள்ள படம் பகாசூரன்' என குறிப்பிட்டார்.

மேலும் பேசிய இயக்குநர் மோகன் ஜி, ' நல்ல படம் பண்ணி இருக்கோம். தரமான படம் பண்ணி உள்ளோம். நானும் செல்வா அவர்களும் நிறைய பேசி உள்ளோம். நான் செல்வா அவர்களை பார்த்து தான் சினிமாவிற்கு வந்தேன். காதல் கொண்டேன் படம் பார்த்துவிட்டு வெளியில் வந்த பிறகு மக்கள் கொண்டாடுவதைப் பார்த்துவிட்டு, அதை பார்த்து இந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் என நினைத்தேன். அப்போது எனக்கு செல்வாவை தெரியாது.
இது அனைவருக்குமான படம். நான் ஏதோ ஒரு சமூகத்தை எதிர்த்து படம் பண்ண வேண்டும் என்று நினைத்து சினிமாவிற்கு வரவில்லை. அது எல்லாமே அமைந்தது. அது நல்லதா கெட்டதா என்றால் அதை எல்லாம் நான் சினிமாவாகத் தான் பார்க்கிறேன். நான் பார்த்ததை சினிமாவாக எடுக்கிறேன். பா. ரஞ்சித் பட்டியலின மக்களுக்காகவும்; நான் ஓபிசி மக்களுக்குமான படமாக எடுப்பதுமாக அமைந்துவிட்டது.
நான் சினிமாவில் பெரிதாக யாரையும் எதிரியாக பார்க்கவில்லை. என்னுடன் வேலை செய்பவர்கள் தான் என் நண்பர்கள். சினிமாவில் ஒரு சமநிலை வேண்டும். இரண்டு புறமும் படம் வர வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன்பு வெற்றிமாறன் சொன்னது விவாதமாக மாறிவிட்டது. இயக்குநர்களுக்கு இந்த பொறுப்பு உள்ளது. இதற்கு பிறகு வரும் படங்கள் அந்த பொறுப்பை உணர்ந்து இருக்கும். செல்வா, நட்டி உடன் பழகிய பிறகு, சமூகப்பொறுப்பு உள்ள படங்கள் வரும். இதற்கு முன்பு விளையாட்டாக நிறைய செய்துள்ளேன். இதற்கு பிறகு நிறைய சமூகப்பொறுப்புள்ள படங்கள் வரும். உங்களிடம் கொடுத்து விடுகிறேன். நீங்கள் பார்த்து கொள்ளுங்கள். இன்னும் பல விவாதங்கள் வரும். படம் பார்த்து விட்டு சொல்லுங்கள்.
இந்த மேடையில் உள்ளவர்கள் ஒரு சிலர் என் சமூக மக்களாக இருக்கலாம். ஆனால், மற்றவர்கள் அப்படி கிடையாது. நான் பிளான் பண்ணி செய்யவில்லை. அது அப்படி மாறிவிட்டது.
சாதி உள்ளதா என்றால் கண்டிப்பாக உள்ளது. இரண்டு நாட்கள் முன்பு வெற்றிமாறன் அதை தானே சொன்னார். அதை யார் சொன்னது என்பதில் தான் உள்ளது. வெற்றி மாறன் சொன்னால் வேறு நான் சொன்னால் வேறு. நான் அப்படி படம் பண்ணவில்லை என்று தான் சொல்லிக் கொண்டே உள்ளேன். நான் தான் முதல் முறையாக அப்படி பண்ணுவதாக இருந்தால் சொல்லுங்கள். இப்படியே வீட்டிற்கு செல்கிறேன். நான் 100 முறைக்கு மேல் சொல்லி விட்டேன். மீண்டும் மீண்டும் குற்றம் இருப்பதாக சொன்னால் அப்படி தான் ரியாக்ட் பண்ண முடியும்.( செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இயக்குனர் மோகன்).
அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் நான் படம் பார்க்க அழைக்க உள்ளேன். எனக்கு மக்களிடம் நிரூபிக்க வேண்டிய நிலை உள்ளது. அதனால் இந்தப் படத்தை எடுத்துள்ளேன். சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி பற்றிய படம் கண்டிப்பாக எனது இயக்கத்தில் வரும்’ என்றார்.

படம் குறித்து பேசிய இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் பேசுகையில், 'இதற்கு முன்பு இயக்குநர் என்பதால் ஓடிக்கொண்டே இருக்கணும் என்று நினைத்தேன். மோகனை பார்த்த பிறகு தான் எனக்கு தெரிகிறது. இங்கு யாரும் சாதாரணமாக திறமை இல்லாமல் வரவில்லை என்று புரிந்துகொண்டேன். இயக்குநர் என்பதால் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். நேரம் இருக்காது. ஆனால், பின்னால் இருந்து பார்க்கும் போது நிறைய நல்ல மனிதர்களை பார்க்க முடியும். எனக்கு இவ்வளவு பெரிய கதாபாத்திரத்தை கொடுத்த இயக்குநருக்கு நன்றி. நடிப்புக்காக நான் பயிற்சி எதுவும் எடுக்கவில்லை. பயந்து பயந்து தான் நான் அதை செய்துள்ளேன். அந்த பயம் முகத்தில் தெரியும்’ என்றார்.

தனுஷ் மற்றும் செல்வராகவன் படம் ஒரே நாளில் வெளியாவது குறித்த கேள்விக்கு, 'அவர் பெரிய ஸ்டார். இது இயக்குனர் மோகன் படம். அது தனுஷ் படம். அப்படி தான் நான் பார்க்கிறேன். இந்த படத்தின் டிரெய்லர் பார்த்து தனுஷ் எதுவும் சொல்லவில்லை. நாங்கள் குடும்பமாக இருப்போம். ஆனால் படம் பற்றி பேசிக்கொள்ள மாட்டோம்' என்றார்.

இதையும் படிங்க: Pazha Nedumaran: "பிரபாகரன் உயிருடன் உள்ளார்; விரைவில் காட்சி தருவார்" - பழ.நெடுமாறன் பரபரப்பு தகவல்

ABOUT THE AUTHOR

...view details