தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பத்த வைச்ச "பத்தல" பாடல் : ஒன்றியத்தை வம்பிழுத்ததாக போலீசில் புகார் - கமல் மீது காவல் ஆணையரிடம் புகார்

சர்ச்சைக்குரிய பாடல் வரிகள் எழுதியதற்காக நடிகர் கமல்ஹாசன் மீது காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

கமல்ஹாசன்

By

Published : May 12, 2022, 6:49 PM IST

Updated : May 12, 2022, 7:32 PM IST

நடிகர் கமல்ஹாசன் நடித்து வெளிவரவிருக்கும் அடுத்த திரைப்படமான ’விக்ரம்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் ‘பத்தல பத்தல’ நேற்று(மே 12) வெளியானது. இந்தப் பாடலில் அமைந்துள்ள வரிகள் ஒன்றிய அரசை திருடன் என்று கூறும் வகையிலும், சாதி ரீதியான பிரச்னைகளைத் தூண்டும் வகையிலும் அமைந்திருப்பதாக சமூக ஆர்வலர் செல்வம், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இணையம் வாயிலாகப் புகார் அளித்துள்ளார்.

மேலும், இந்த சர்ச்சைக்குரிய பாடல் வரிகளை நீக்கி, பாடலை எழுதிய மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உயர் நீதிமன்றத்தில் விக்ரம் படத்தை தடை செய்ய மனு தாக்கல் செய்யப்படும் எனப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'ஒன்றியத்தின் தப்பால்லே..., ஒன்னுமில்லே இப்பால்லே...!' - அரசியல் பாட்டுப்பாடிய ஆண்டவர்

Last Updated : May 12, 2022, 7:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details