சென்னை: வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் "வாரிசு" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்தப்படம் 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. முதல் முறையாக நேரடி தெலுங்கு படத்தில் விஜய் நடித்து வருவதால், இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மூலம் தில் ராஜு தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, யோகி பாபு உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள "ரஞ்சிதமே" என்ற பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.