திருவனந்தபுரம்: புகழ்பெற்ற பாலிவுட் இயக்குநர் 'சாயத் அக்தர் மிர்ஷா'-வின் தலைமையிலான நடுவர் குழு 145 படங்களை வெவ்வேறு பிரிவுகளின்கீழ் கேரளா மாநில 52ஆவது திரைப்பட விருதுகளுக்குத் தேர்வு செய்தனர்.
அதன்படி சிறந்த ஆண் பாடகருக்கான விருதை, 'மின்னல் முரளி' படத்தில் இடம்பெற்ற 'ராவில்' எனும் பாடலுக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த பாடகர் 'பிரதீப் குமார்' பெறுகிறார். சிறந்த நடிகைக்கான விருதை ‘பூதகாலம்’ திரைப்படத்திற்காக நடிகை ரேவதி பெறவிருக்கிறார். மீதமுள்ள விருதுகளை பெறும் நபர்கள் குறித்த விவரம் கீழே வருமாறு,
சிறந்த நடிகர் - பிஜு மேனன்(ஆர்கரியம்) , ஜோஜூ ஜார்ஜ்( நாயட்டு, மதுரம், ஃப்ரீடம் ஃபைட்)
சிறந்த திரைப்படம்: அவசவ்யுகம் (இயக்குநர்: கிருஷாந்த்)
இரண்டாவது சிறந்த திரைப்படம்: சவிட்டு மற்றும் சிஷிடூ (இரண்டு திரைப்படங்கள் பெறுகின்றன)
மிகப் பிரபலமான திரைப்படம்: ஹிருதயம் (இயக்குநர்: வினீத் ஸ்ரீனீவாசன்)
சிறந்த இயக்குநர்: திலீஷ் போத்தன் (ஜோஜி)