வாஷிங்டன்:அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 2024 மார்ச் 10ஆம் தேதி 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளதாக தி அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுகளை பெறும் படங்கள் 10 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் அதிகப்படியான வாக்குகளை பெறும் படங்கள் இறுதி கட்ட நியமனங்களுக்குத் தேர்வாகும் என அறிவித்துள்ளது. இதற்கான வாக்குப்பதிவு 2024ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி முதல் 16 வரை நடைபெறும் என தெரிவித்துள்ளது.
88 நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் 10 பிரிவுகளில் தகுதி பெற்றுள்ள நிலையில், இதில் அதிகப்படியாக ஐந்து பிரிவுகளின் கீழ் நடிகர் மார்கோட் ராபியின் பிரபலமான மெட்டா காமெடி படமான ‘பார்பி' தேர்வாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய திரைப்படங்கள் சார்பில் இயக்குநர் ஜூட் அந்தோனி ஜோசப் இயக்கத்தில், டோவினோ தாமஸ் நடித்து வெளியான மலையாளத் திரைப்படம் 2018- Everyone is a Hero, 2024 ஆஸ்கார் விருதுகளில் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் போட்டியிடுவதற்கான இறுதி ஒப்புதலுக்காக காத்திருந்த நிலையில். பட்டியலில் இருந்து வெளியேறி உள்ளது.