தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 19, 2022, 3:36 PM IST

ETV Bharat / entertainment

ஆயிரம் அடியில் சிம்புவுக்கு சுவரொட்டி - அசத்திய மதுரை ரசிகர்கள்

சிம்பு நடித்த 'மஹா' திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகும் நிலையில், மதுரையில் ஆயிரம் அடியில் அவருக்கு சுவரொட்டி வைத்து ரசிகர்கள் அசத்தியுள்ளனர்.

ஆயிரம் அடியில் சிம்புவுக்கு சுவரொட்டி - அசத்திய மதுரை ரசிகர்கள்
ஆயிரம் அடியில் சிம்புவுக்கு சுவரொட்டி - அசத்திய மதுரை ரசிகர்கள்

சிம்பு நடித்த 'மஹா' திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் நடிகை ஹன்சிகா சிம்புவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். உலகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் மதுரை சிம்பு ரசிகர்கள் 1000 அடியில் சுவரொட்டி அடித்து சாதனை செய்துள்ளனர். சிம்பு நடித்து கடைசியாக வெளியான ’மாநாடு’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து வெளியாகும் சிம்புவின் படம் என்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆயிரம் அடியில் சிம்புவுக்கு சுவரொட்டி - அசத்திய மதுரை ரசிகர்கள்

இதனையடுத்து சிம்பு நடித்துள்ள ’வெந்து தணிந்தது காடு’ மற்றும் ’பத்து தல’ ஆகிய திரைப்படங்களும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மணிரத்னத்திற்கு கரோனா இல்லை!

ABOUT THE AUTHOR

...view details