கடந்த 2007 ஆம் ஆண்டு விஷ்னுவர்தன் இயக்கத்தில் அஜித், நயந்தாரா ஆகியோர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற படம் பில்லா. அதனை தொடர்ந்து 'உன்னைப் போல் ஒருவன்' படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கத்தில் ‘பில்லா 2’ வெளியானது.
மங்காத்தா படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து வந்த படம் ‘பில்லா 2’. இந்தப் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை என்றாலும், பலருக்கும் இந்தப் படம் பிடித்திருந்தது. இப்படம் குறித்து பெரிதளவில் பேசப்பட்டது.
தமிழ் சினிமாவில் பெரும்பாலும் இரண்டாம் பாகம் என்றாலே, முதல் பாகத்தின் தொடர்ச்சியாக அமைந்திருக்கும் ஆனால் இப்படத்தில், நேரெதிராக பில்லா கதாப்பத்திரத்தின் ஆரம்ப காலகட்டத்தினை கூறும் வகையில் அமைந்திருக்கும்.
இந்தப் படத்தில் வசனங்கள் எல்லாம் ஷார்பாக இருக்கும், ‘எனக்கு நண்பனா இருக்க தகுதி வேணாம், எதிரியா இருக்க தகுதி வேணும்; என் வாழ்நாள்ல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா... ’இப்படி பல வசனங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
பில்லா 2 படத்தின் மற்றொரு முக்கியமான பலம் யுவனின் இசை. தன்னைத்தானே செதுக்கியவன், ஏதோ ஒரு மயக்கம் ஆகிய பாடல்கள் பின்னணி இசை ஆகியவை இளைஞர்கள் வெகுவாக கவர்ந்தது. இப்படத்தின் ஸ்டண்ட் காட்சிகளும் வெகுவாக பேசப்பட்டது.
இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பெரிய அளவில் பூர்த்தி செய்யவில்லை என்றாலும் சினிமா ரசிகர்களிடையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் படம் வெளியாகி இன்றோடு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க:நண்பர் சிம்புவுக்கு நன்றி - "மஹா" மேடையில் பேசிய ஹன்சிகா