தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நாயகன் மீண்டும் வரார்... டெட்பூல் 3 படத்தில் இணைந்த வல்வுரின் - டெட்பூல்

டெட்பூல் வரிசையில் வரவிருக்கும் டெட்பூல் 3ம் பாகத்தில் வல்வுரின் கதாபாத்திரம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் எக்ஸ் மென் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

நாயகன் மீண்டும் வரார்... டெட்பூல் 3 படத்தில் இணைந்த வல்வுரின்
நாயகன் மீண்டும் வரார்... டெட்பூல் 3 படத்தில் இணைந்த வல்வுரின்

By

Published : Sep 28, 2022, 11:26 AM IST

Updated : Sep 28, 2022, 12:40 PM IST

இளைஞர்கள் ரசிக்கும் சூப்பர் ஹீரோ படமான டெட்பூல் இதுவரை இரண்டு பாகங்கள் வெளியாகி வெற்றி பெற்றிருந்தது. 3 வது பாகம் தயாராகி வந்த நிலையில் அதுகுறித்து பெரிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் டெட்பூல் படத்தின் நாயகன் ரயான் ரெனால்ட்ஸ் அவரது சமூக வளைதள பக்கங்களில் படத்தின் அப்டேட் குறித்து ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளமெங்கும் வைரலானது.

நாயகன் மீண்டும் வரார்... டெட்பூல் 3 படத்தில் இணைந்த வல்வுரின்

ரயான் ரெனால்ட்ஸ் பேசிக்கொண்டிருக்கும் அந்த வீடியோவில் அவர் பின்புறம் ஒருவர் நடந்து செல்கிறார். அப்போது ரயான் ரெனால்ட்ஸ் "ஏய், ஹக், நீ இன்னொரு முறை வல்வுரின் ஆக நடிக்கிறாயா?" எனக்கேட்க ஜேக்மேன் பின் இருந்து கட்டாயமாக என பதில் அளித்து செல்கிறார். பின் தோன்றும் டெட்பூல் லோகோவை வல்வுரின் நகம் கிழிப்பது போல் தோன்றி படம் 2024 செப்டம்பர் 6 அன்று வெளியாகும் என்ற அறிவிப்போடு வீடியோ முடிகிறது.

ஏற்கனவே எக்ஸ்மென் ஆர்ஜின்: வல்வுரின் என்னும் படத்தில் வேட் வில்சன் என்னும் கதாபாத்திரத்தில் கத்தி சண்டை சூரனாக ரயான் ரெனால்ட்ஸ் நடித்திருப்பார். அந்த படத்தின் இறுதியில் வல்வுரினும் பழைய டெட்பூல் ஆகிய வேட் வில்சன் கதாபாத்திரமும் மோதியிருப்பார்கள்.

தற்போது இருவரும் மீண்டும் டெட்பூல் 3 படத்தில் இணைவது உறுதியாகி இருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:வாரிசு படபிடிப்பு... ரசிகர்களை சந்தித்த விஜய்

Last Updated : Sep 28, 2022, 12:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details