தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

தொலைகாட்சித் தொடர் இயக்க விருப்பம் -  ஹாலிவுட் இயக்குநர்  ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் - ஹாலிவுட்

பிரபல ஹாலிவுட் இயக்குநரான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், எதிர்காலத்தில் தொலைக்காட்சி தொடரை இயக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்

By

Published : Jan 19, 2023, 11:27 AM IST

வாஷிங்டன்: புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் மற்றும் சேவிங் ப்ரைவேட் ரையான் ஆகிய இரண்டு திரைப்படங்களுக்காக சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கார் விருதுகளைப் பெற்றவர். இவர் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கார் விருதிற்காக ஆறு முறை பரிந்துரைக்கப்பட்டவர்.

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம்வொர்க்ஸை தனது நண்பர்களின் உதவியுடன் ஆரம்பித்தார். இவர் திரைப்படம் மட்டுமல்லாது பல தொலைக் காட்சித் தொடர்களையும், வீடியோ கேம்ஸ்களுக்கான திரைக்கதைகளையும் எழுதி இயக்கியுள்ளார்.

இவர் அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அப்போது அவர், வருங்காலத்தில் புதுவிதமான தொலைக்காட்சி தொடரை இயக்க விருப்பமுள்ளதாகவும், குறிப்பாக 'மேர் ஆஃப் ஈஸ்ட்டவுன்' போன்ற தொடரை இயக்க விருப்பமுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

HBO-வில் ஓடிய 'மேர் ஆஃப் ஈஸ்ட்டவுன்' தொடரில் நடித்த கேட் வின்ஸ்லெட், பிலடெல்பியாவிற்கு அருகிலுள்ள தனது சிறிய நகரத்தில் ஒரு கொலையை விசாரிக்கும் உணர்ச்சிவசப்பட்ட துப்பறியும் நபராக நடித்தார் என்று கூறிய ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், இந்த வரையறுக்கப்பட்ட தொடர் பல வெற்றிகைளை சுவைத்துள்ளது என தெரிவித்தார்.

முன்னதாக ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் 'பேண்ட் ஆஃப் பிரதர்ஸ்' போன்ற பாராட்டப்பட்ட சிறிய தொடரை தயாரித்துள்ளார். ஆனால் அவர், ஒரு முழு தொலைக்காட்சி தொடரை தனிப்பட்ட முறையில் இயக்கியதில்லை. மேலும் அவர், 'லிங்கன்' என்ற படத்தை ஆறு மணி நேர தொடராக இயக்க நினைத்துள்ளார்.

ஒரு திரைப்படமாக, "லிங்கன்" சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனர் உட்பட 12 அகாடமி விருது பரிந்துரைகளைப் பெற்றது. ஆனால் இதனை ஆறு மணி நேர தொடராக இயக்க நினைத்ததாக கூறிய அவர் தன்னை யாரும் நம்பவில்லை, எல்லோரும் அதை மறுத்ததாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: சதிஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தின் புதிய அப்டேட்

ABOUT THE AUTHOR

...view details