வாஷிங்டன்:அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர் பேரி ஜென்கின்ஸ், முஃபாசா தி லயன் கிங் திரைப்படம் குறித்து டி23 எக்ஸ்போவில் தெரிவித்தார். லயன் கிங் திரைப்படத்தின் முன் தொடர்ச்சியாக இந்த படம் உருவாகிறது. இதில் முஃபாசாமற்றும் ஸ்கார் கதாப்பாத்திரங்கள் முக்கிய இடம் பெற உள்ளன.
1994ஆம் ஆண்டு வெளியான லயன் கிங் திரைப்படத்தில் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் முஃபாஸா கதாபாத்திரத்திற்கும், ஜெர்மி அயர்ன்ஸ் ஸ்கார் கதாபாத்திரத்திற்கும் குரல் கொடுத்தனர். அந்த கதாபாத்திரங்களின் இளைய பதிப்புகளாக ஆரோன் பியர், கெல்வின் ஹாரிசன் குரல் கொடுத்துள்ளனர். இவர்களே வரவிருக்கும் முஃபாசா தி லயன் கிங் படத்திற்கும் குரல் கொடுக்கின்றனர்.