தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பொங்கல் விருந்தாக வரும் இரண்டு பான் இந்தியா படங்கள்... அட கமல்ஹாசன் படமும் ரிலீஸ் ஆகுதுபா? - நடிகர் கமல்ஹாசன்

ஜான் ஆபிரகாமின் தி டிப்ளமேட் திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் நிலையில் மறுநாள் ஜனவரி 12ஆம் தேதி பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் நடித்துள்ள ப்ராஜெக்ட் கே திரைப்படம் நாடு முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் வெளியாகிறது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கபடுகிறது.

john abrahams
john abrahams

By

Published : Jul 2, 2023, 9:18 PM IST

Updated : Jul 2, 2023, 10:48 PM IST

ஹைதராபாத் :நடிகர் ஜான் ஆபிரகாம் நடித்துள்ள திரைப்படமான தி டிப்ளமேட். வரும் ஜனவரி11 ஆம் தேதி பான் இந்தியா படமாக திரையரங்குகளில் வெளியாகும் என்று படக் குழு அறிவித்து உள்ளது.

இத்திரைப்படம் தேசத்தையே உலுக்கிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் என்று கூறப்படுகிறது. நாம் ஷபானா ,ஸ்பெஷல் ஓப்ஸ் மற்றும் முக்பீர் போன்ற மிகவும் பிரபலமான வெப் சீரிஸ்களை இயக்கிய சிவம் நாயர் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு, ஜான் ஆபிரகாம் தனது சமூக ஊடகங்களில் படத்தின் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதியைப் வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, இத்திரைப்படம் ஒரு உற்சாகமான நாடகம் போல் தெரிகிறது, அது உங்களை மயக்கும். ஒரு உயர் பதவியில் இருக்கும் அரசாங்க அதிகாரியின் காதபாத்திரத்தில் உருவாகியுள்ள, தி டிப்ளமேட்' திரைப்படம் உங்களை ஒரு ரோலர் கோஸ்டர் பயணத்திற்கு அழைத்துச் சென்று, உங்கள் கவனத்தை இறுதிவரை வைத்திருப்பதற்கு உத்தரவாதம் அளிக்கும்.

ஜனவரி 11,2024 அன்று, திரைப்படம் வெளியாகும், மேலும் இது திரையுலகினரைக் கவர்வது உறுதி என்றும், சில போர்கள் போர்க்களத்திற்கு வெளியே கூட நடத்தப்படுகின்றன. ஒரு புதிய வகையான ஹீரோவுக்குத் தயாராகுங்கள்" என்று ஜான் ஆபிரகாம் பதிவிட்டு உள்ளார். மேலும் இந்த பதிவு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அதேநேரம், மஹாநடி, ஜாதி ரத்னலு போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமான பொருட் செலவில் உருவாகி வரும் திரைப்படம் 'ப்ரொஜெக்ட் கே'(Project K). வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகியோர் நடித்துள்ளனர். அறிவியல் புனை கதையை மையமாக வைத்து ப்ராஜெக்ட் கே படம் உருவாக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ப்ராஜெக்ட் கே, வைஜெயந்தி மூவிஸின் 50வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டது. அப்போது கரோனா பரவல் இருந்ததால், படப்பிடிப்பு தாமதமானது. சுமார் 600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ப்ராஜெக்ட் கே படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நடிகர் கமல்ஹாசன் இப்படத்தில் வில்லனான நடிக்கக்கூடும் என இணையத்தில் தகவல்கள் பரவி வந்தன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நடிகர் கமல்ஹாசன் பிரபாஸூக்கு வில்லனாக நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் கமல்ஹாசன், மரோ சரித்ரா தொடங்கி பல நேரடி தெலுங்கு படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். இந்நிலையில், கமல் மீண்டும் தெலுங்கு சினிமாவில் நடிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அவரது டோலிவுட் ரசிகர்களையும், பிரபாஸ் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பெரும் பாலிவுட் உச்ச நட்சத்திரங்கள் இனைந்து பான் இந்தியா திரைப்படமாக ப்ராஜெக்ட் கே உருவாகி வரும் நிலையில், இப்படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் நடிகர் ஜான் ஆபிரகாம் நடித்துள்ள தி டிப்ளமேட் ஜனவரி 11ஆம் தேதியும் பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் நடித்துள்ள ப்ராஜெக்ட் கே திரைப்படம் ஒரு நாள் கழித்து ஜனவரி 12 தேதியும் நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இதனால் பாக்ஸ் ஆபிஸில் கடுமையான போட்டி நிலவும் என்கிறார்கள் சினிமா விமர்சகர்கள். மேலும் இந்த 2 திரைப்படங்களும் ரசிகர்களுக்கு தரமான விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:Robo Shankar:'கட்டை விரலையாவது தொட்டுக்கிறேன்' ஹன்சிகாவை கொச்சையாக பேசிய ரோபோ சங்கர்

Last Updated : Jul 2, 2023, 10:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details