தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஐசரி கணேஷ் தயாரிக்கும் புதிய படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி!

டாக்டர் ஐசரி கணேஷ் தயாரிக்கும் புதிய படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹிப் ஹாப் தமிழா
ஹிப் ஹாப் தமிழா

By

Published : Nov 15, 2022, 3:55 PM IST

'வெந்து தணிந்தது காடு' படத்தின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்கிறார்.

'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் தமிழா கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக உயர்ந்திருக்கும் ஹிப் ஹாப் தமிழா நடிப்பில் தயாராகும் ஏழாவது படம் இது, எல் கே. ஜி, கோமாளி, மூக்குத்தி அம்மன், வெந்து தணிந்தது காடு என வரிசையாக பல திரைப்படங்களைத் தயாரித்து, தமிழ் திரையுலகில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தரமான படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வரும் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் பிரம்மாண்டமான பொருள் செலவில் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

டாக்டர் ஐசரி கே கணேஷ் - ஹிப்ஹாப் தமிழா - கார்த்திக் வேணுகோபாலன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இப்படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் கோகுல் இயக்கத்தில், நடிகர் ஆர். ஜே. பாலாஜி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சிங்கப்பூர் சலூன்’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஹாட்ஸ்டாரில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் “பிரின்ஸ்” ...

ABOUT THE AUTHOR

...view details