தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

வெளியானது 'Guardians of the Galaxy vol. 3' ட்ரெய்லர் - சினிமா செய்தி

மார்வெலின் ’கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி’ படத்தின் மூன்றாம் பாகத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

வெளியானது 'Guardians of the Galaxy vol. 3' டிரைலர்
வெளியானது 'Guardians of the Galaxy vol. 3' டிரைலர்

By

Published : Dec 2, 2022, 4:35 PM IST

சூப்பர் ஹீரோ திரைப்படங்களின் பிரபல தயாரிப்பு ஸ்டூடியோவான மார்வெலின் அடுத்த படைப்பாக உருவாகியுள்ள, கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி படத்தின் மூன்றாம் பாகத்தின் (Guardians of the Galaxy vol. 3) ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

முன்பு வெளியான 'அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்' படத்தின் படி இறந்த கமோரா கதாப்பாத்திரம் இந்த படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கூடியுள்ளது.

இந்தப் படத்தில் கிறிஸ் பிராட், ஜோ சல்டானா, டேவ் பாடிஸ்டா, கரேன் கில்லன், போம் கிளெமென்டிஃப், சீன் கன், பிராட்லி கூப்பர் மற்றும் வின் டீசல் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் மார்வெல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கதாபாத்திரமான ஆடம் வார்லாக் கதாப்பாத்திரத்தில் வில் போல்டர் நடித்துள்ளார்.

இந்த 'கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 3' திரைப்படம் வருகின்ற 2023ஆம் ஆண்டு மே 5 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தான் ’கார்டியன்ஸ் ஆப் கேலக்ஸியின்’ இறுதி பாகம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:'அவதார் 2' தமிழகத்தில் வெளியாவதில் சிக்கல்!

ABOUT THE AUTHOR

...view details