லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா): பிரபல ஆங்கில வெப் தொடர் ஃப்ரண்ட்ஸ் (Friends ) மூலம் பிரபலமடைந்த நடிகர் மேத்யூ பெர்ரி (54) நேற்று தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Friends வெப் சீரீஸுக்காக எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெர்ரி, அந்த தொடரில் சாண்ட்லர் பிங் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல செய்தி நிறுவனம், நடிகர் மேத்யூ பெர்ரி உயிரிழந்ததை முதலில் உறுதிபடுத்தி உள்ளது. நடிகர் மேத்யூ பெர்ரி இறந்தது குறித்து அமெரிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். friends வெப் சீரீஸ், பெர்ரியை ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகராக மாற்றியது.
மேலும் Friends வெப் சீரீஸில் ஜெனிஃபர் அனிஸ்டன், கோர்ட்னி கோக்ஸ், மேட் லேப்ளான்க், லிசா குத்ரோவ், டேவிட் ஸ்க்விம்மர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த தொடரின் முடிவில் சாண்ட்லரும், மோனிகாவும் திருமணம் செய்து கொள்வர். Friends வெப் தொடர் தொலைக்காட்சி வரலாற்றில் மிகப்பெரும் வெற்றி பெற்றது.