ஹைதராபாத்:உலக அளவில் புகழ் பெற்ற இயக்குநர்களுள் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன் (Christopher Nolan). நோலனின் தனித்துவம் வாய்ந்த படங்கள் உலகெங்கும் பெரும் வறவேற்பை பெறக்கூடியவை. இவருடைய திரைப்படங்கள் பிரம்மாண்டத்தின் உச்சத்தில் இருக்கக்கூடியவை. இவருடைய தனித்துவமான திரைக்கதைக்கு உலகெங்கும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. கிறிஸ்டோபர் நோலன் தனது சிறப்பான திரைக்கதை திறனால், ஐந்து முறை ஆஸ்கார் விருது பெற்றுள்ளார்.
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில், டைடானிக் (Titanic) கதாநாயகன் லியனார்டோ டிகாப்ரியோ (Leonardo Dicaprio) நடிப்பில் வெளியான 'இன்ஷெப்சன்' (Inception), 'பேட்மென் பிகின்ஸ்' (Batman Begins) போன்ற திரைப்படங்கள் மூலம் இந்தியாவில் தனக்கென ரசிகர்களை உருவாகிக் கொண்டார். தான் இயக்கிய 'டென்னட்' (Tenet) என்ற படத்தின் ஒரு பகுதி படப்பிடிப்பை மும்பையில் எடுக்கப்பட்டது. தனது அடுத்த படமான 'ஓபன்ஹெய்மர்' (Oppenheimer) அறிவிப்பு வந்த உடனே நோலனின் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். காரணம் கிறிஸ்டோபர் நோலன் தனது திரைப்படங்களில், மிக பிரமாண்ட காட்சிகளை எந்த வித கிராஃபிக்ஸ் இல்லாமல் படமாக்க கூடியவர்.
அந்த வகையில் ஓபன்ஹெய்மர் படம், அணுகுண்டின் தந்தை என்று அழைக்கப்படும் அமெரிக்க விஞ்ஞானி ஜெ. ராபர்ட் ஓபன்ஹெய்மர் (J. Robert Oppenheimer) என்பவரின் வாழ்க்கை மற்றும் உலகப் போரின் போது உருவாக்கப்பட்ட உலகின் முதல் அணுகுண்டை பற்றி படம். இப்படத்தில் அணுகுண்டு வெடிக்கும் ஒரு காட்சி இருப்பதாகவும், அதற்காக உண்மையில் குண்டு ஒன்றை வெடிக்க வைத்து படப்பிடித்தாகவும் கூறப்பட்டது.
இது குறித்து ஒரு நேர்காணலில் கிறிஸ்டோபர் நோலனிடம் கேட்ட போது, இப்படத்தை பார்க்கும் போது பார்வையாளர்கள் உண்மையில் ஒரு அணுகுண்டு வெடிப்பதின் அனுபவிப்பார்கள் என்று தெரிவித்திருந்தார். நோனலின் இந்த கூற்று இப்படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.