தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 15, 2019, 11:55 AM IST

ETV Bharat / elections

'குற்றசாட்டை நிரூபித்தால் தேர்லில் போட்டியிடமாட்டேன்'-அசாம் கான்

லக்னோ: ஜெயபிரதா குறித்து அவதூராக பேசியதை நிரூபித்தால், தான் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் அசாம் கான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அசாம் கான்

மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் நடிகை ஜெயபிரதாவும் சாமஜ்வாதி கட்சி சார்பில் அசாம் கானும், உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவை தொகுதியில் களம் காணுகிறார்கள்,

இந்நிலையில் நேற்று சாமஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் நடைப்பெற்ற தேர்தல் பேரணியில் பேசிய அசாம் கான், "ஜெயபிரதாவை நான் தான் ராம்பூருக்கு அழைத்து வந்தேன், அவரை புரிந்துக் கொள்ள இம்மக்களுக்கு 17 வருடங்கள் ஆயிற்று, அனால் அவர் காக்கி உள்ளாடை அணிந்திருப்பது எனக்கு வெரும் 17 நாட்களில் தெரிந்துவிட்டது" என்று அவர் தெரிவித்தது, தேர்தல் நேரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அசாம் கானுக்கு பாஜக கட்சி தரப்பிலும், பல பெண் அரசியல் தலைவர்கள் மற்றும் பத்திரகையாளர்கள் சார்பிலும் இருந்து கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், அவர் அந்த பேச்சு குறித்து பதில் தெரிவித்திருப்பதாவது, பேரணியில் தான் யார் பெயரையும் குறிப்பிட்டு பேசவில்லை எனவும், மேலும் இந்த குற்றசாட்டு நிரூபிக்கப்பட்டால், தான் இந்த மக்களவை தேர்தலில் போட்டியிடவதை கைவிட தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் நடிகை ஜெயபிரதா 2004 முதல் 2009 வரை சாமஜ்வாதி கட்சி சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.பி.யாக இருந்தார். பின் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக அவர் கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். அதன் பின்பு ஜெயபிரதா கடந்த மாதம் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடதக்கது.

ABOUT THE AUTHOR

...view details