மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 18 தேதி வரை ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம் உட்பட 20 மாநிலங்களுக்கு வரும் வியாழக்கிழமை தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான தேர்தல் பரப்புரை இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் ஆந்திரப்பிரதேச மாநிலம் மஜ்ஜிலிபட்டினத்தில் தெலுங்கு தேச கட்சித் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு நேற்று பரப்புரை மேற்கொண்டார்.