50,000 வாக்குகள் வித்தியாசம் நிச்சயம்! அடித்துக் கூறும் அமுமுக வேட்பாளர் - அமமுக வேட்பாளர்
கரூர்: 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறுவோம் என்று அமமுக வேட்பாளர் சாகுல் ஹமீது நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் கடைசி நாளான நேற்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக சாகுல் ஹமீது என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அவர்களை வைப்புத்தொகை இழக்கச் செய்வேன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு சென்றிருக்கும் செந்தில் பாலாஜி தற்போது அரவக்குறிச்சி வேட்பாளராக இருக்கிறார் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவரைப்பற்றி நகைச்சுவையாக சமூக வலைதளங்களில் நேற்று இன்று நாளை என்ற கேள்விக்குறியுடன் புகைப்படங்கள் உலா வருகிறது என்று கூறினார்.
தொகுதி மேம்பாட்டு கோரிக்கைகள் தொடர்பாக என்ன செய்யப்போகிறீர்கள் என்ற கேள்விக்கு,
அரவக்குறிச்சி தொகுதியில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக இருப்பதால், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் அமைத்து தண்ணீரை பராமரித்தல், இங்கு பெரும்பான்மையான வேளாண்மை முருங்கைக்காய் விவசாயம் என்பதால் தொகுதியில் முருங்கை பவுடர் தயாரிக்கும் நிறுவனம் அமைத்து மேம்படுத்துதல், விவசாயிகளுக்கு கொள்முதல் மையம் அமைத்தல் போன்றவை மேற்கொள்ளப்படும்.
தேர்தல் செயல்பாடு என்பது பற்றி அதிமுக மற்றும் திமுக ஆகி இரு கட்சியினருக்கும் சரியான பாடம் புகட்டுவோம். ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றிபெறுவோம் என்று கூறினார்.