சென்னை: 2021 சட்டப்பேரவைத் தேர்தலை நேர்மையாக நடத்த இந்திய தேர்தல் ஆணையம் வியூகங்கள் வகுத்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
வாக்குக்கு 'மது, பணம், இலவசம்' இல்லாத தேர்தல் நடத்த முடிவு - தேர்தல் ஆணையம் - இந்திய தேர்தல் ஆணையம்
தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குக்கு மது, பணம், இலவச பொருட்கள் விநியோகம் செய்யப்படாத வண்ணம் கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. மேலும், கரோனா விதிமுறைகளை சரியாக பின்பற்றவும் வழிமுறைகள் வகுப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முறையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, தேர்தலில் வாக்குக்காக பொதுமக்களுக்கு மது, பணம், இலவசப் பொருட்கள் வழங்குவதை முற்றிலும் முடக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. மேலும், கரோனா விதிமுறைகளை சரியாக பின்பற்றவும் வழிமுறைகள் வகுப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதனைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. பிகார் தேர்தலின்போது பின்பற்றப்பட்ட நடைமுறைகளை, தமிழ்நாட்டிலும் பின்பற்ற தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.