தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

தினகரன் - எடப்பாடி அணி இணைந்தால்? - ராம்தாஸ் அத்வாலே

சென்னை: அதிமுகவில் டிடிவி தினகரன் இணைய வேண்டும் என்பதற்கு தொடர்ந்து முயற்சி செய்வேன் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

ராம்தாஸ் அத்வாலே

By

Published : Apr 11, 2019, 5:34 PM IST

Updated : Apr 11, 2019, 5:41 PM IST

இந்திய குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடும் பவர் ஸ்டார் சீனிவாசன் உட்பட மூன்று வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்ய மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சென்னை வருகை தந்திருந்தார். முன்னதாக அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ராம்தாஸ் அத்வாலே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

நாடாளுமன்ற தேர்தலில் இந்திய குடியரசு கட்சி போட்டியிட உள்ளதாக கூறிய அவர், இந்திய குடியரசு கட்சி என்பது அங்கீகாரம் பெற்ற கட்சி என்றும் இந்த கட்சி சார்பில் 3 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர் என்றார்.

கடந்த 5 ஆண்டுகளில் மோடி சிறந்த ஆட்சியை அளித்துள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சி தவறான கருத்துக்களை கூறி மக்களை திசை திருப்பி வருகின்றனர். மத்திய அரசு 13 கோடி ஏழை குடும்பங்களுக்கு, சமையல் எரிவாயு இணைப்பை வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி விவசாயிகள் நலனை பாதுகாக்கும் வகையில் திட்டங்கள் அறிவித்துள்ளனர். அதேபோல் 72 ஆயிரம் கோடியை இடைக்கால பட்ஜெட்டில் சமூகநீதி மற்றும் மேம்பாட்டு துறைக்கு மத்திய அரசு ஒத்துக்கியுள்ளது என்று தெரிவித்தார்.

இந்திய குடியரசு கட்சி போட்டியிடும் 3 தொகுதிகளை தவிர மீதமுள்ள 37 தொகுதிகளில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிக்கு ஆதரவு அளிக்க இந்திய குடியரசு கட்சி முடிவு செய்துள்ளது. கடந்தமுறை தான் சென்னை வந்தபோது டிடிவி தினகரனை தொடர்பு கொண்டு அதிமுகவில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ராம்தாஸ் அத்வாலே

மேலும் தினகரன் அதிமுகவிலிருந்தால் கட்சி மேலும் வலுப்பெறும் என்று கருத்து தெரிவித்திருந்தாக அவர் கூறினார். ஏற்கனவே தம்பிதுரையுடன், டிடிவி. தினகரனை அதிமுகவில் இணைப்பது குறித்து நாடாளுமன்றத்தில் சந்தித்து பேசியதாக கூறினார். அப்போது, பேசிய தம்பிதுரை தினகரனை அதிமுகவில் இணைத்துக் கொள்வதில் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என கூறியதாகவும் அத்வாலே தெரிவித்தார்.

காங்கிரஸ் - திமுக கூட்டணியினர் மக்களவை தேர்தலில் 10 தொகுதிக்கு மேல் வெற்றிப் பெற மாட்டார்கள் என கருத்து தெரிவித்த அவர், காங்கிரஸ் ஆட்சியில் கூட இதுபோன்று பல்வேறு பிரச்னைகள் இருந்துள்ளது என்றார். தேர்தலுக்கு பின் தினகரன் - எடப்பாடி அணி இணைந்தால் ஒருவர் முதல்வராகவும், இருவர் துணை முதல்வராக இருக்கலாம் என்பது என்னுடைய கருத்து என்றும் கூறினார்.

Last Updated : Apr 11, 2019, 5:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details