தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

இவர்கள் அனைவரும் மாண்புமிகு கயவர்கள் - யாரை சொல்கிறார் கமல்ஹாசன்? - கமல் தாக்கு

சிவகங்கை: இவர்கள் அனைவரும் மாண்புமிகு கயவர்கள் என அரசியல்வாதிகளை தாக்கி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமலஹாசன்

By

Published : Apr 13, 2019, 11:50 AM IST

சிவகங்கையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிநேகனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ”நான் அரசியலுக்கு 30 ஆண்டுகள் தாமதமாக வந்துவிட்டேன். அதற்காக என்னை மன்னித்துவிடுங்கள். நாளை கொள்ளையடித்த ஆட்சியர்களை கைது செய்யும்போது, கொள்ளையடித்த சொத்துக்களையும் கையகப்படுத்துவோம். அந்த தைரியம் என்னிடம் உள்ளது. மேலும் வேலைவாய்ப்பு, கண்மாய்கள் தூர்வாருதல் போன்றவற்றை முதலாவதாக செய்வோம்.

இவர்கள் அனைவரும் மாண்புமிகு கயவர்கள்

இங்குள்ள கயவர்களை கயவர்கள் என்று சொல்லக்கூடாது. யாராக இருந்தாலும் மரியாதையாக அழைக்க வேண்டும். இவர்கள் அனைவரும் மாண்புமிகு கயவர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு பள்ளிகளை உலக தரத்திற்கு இணையாக மாற்றித் தருவோம். இலவசங்களை கொடுத்து ஏழ்மையை போக்குவோம் என்பவர்களை நம்பாதீர்கள். அவர்களிடம் வேலை வாய்ப்பைக் கேளுங்கள்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details