தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

அதிமுக, பாஜக கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும் - ஜி.கே.வாசன் உறுதி - 40 தொகுதிகளை

நாமக்கல்: அதிமுக, பாஜக கூட்டணி தமிழகத்தின் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நாமக்கல் மாவட்டத்தில் நடந்த தோ்தல் பரப்புரையில் கூறியுள்ளார்.

அதிமுக, பாஜக கூட்டணி தமிழகத்தின் 40 தொகுதிகளை கைப்பற்றும் - ஜி.கே.வாசன் உறுதி

By

Published : Apr 9, 2019, 2:50 PM IST

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தேர்தல் பரப்புரை நடத்தியது. பிறகு செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன், ”தமிழகத்தில் மொத்தம் இரண்டு அணிகள் இருக்கின்றன. ஒன்று மக்கள் விரும்பும் அணி. மற்றொன்று மக்கள் விரும்பாத அணி.

மோடி அரசு இந்தியாவை வளர்ச்சியின் பாதைக்கு இட்டுச்செல்கிறது. பாதுகாப்பான அரசாக திகழ்கிறது. அதிமுக-பாஜக கூட்டணி தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றும். தென்னிந்தியாவில் ராகுல் காந்தி போட்டியிடுவது காங்கிரஸ் கட்சியின் பலவீனத்தைக் காட்டுகிறது” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details