தென்சென்னை தொகுதிக்குட்பட்ட பகுதியான அடையாறில் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் உள்ள அமுமக அலுவலகத்தில் வைத்து பணம் கொடுப்பதாக அதிமுகவினர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்ததாக தொலைக்காட்சியில் செய்திகள் வெளிவந்தது.
‘பணம் கொடுப்பதை எங்கள் வேட்பாளர் தான் காவல்துறைக்கு தெரிவித்தார்’ - டிடிவி தினகரன்
தேனி: ஆண்டிபட்டி அமமுக வேட்பாளர் தான் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் கொடுத்தது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அந்த வளாகத்தில் சிறிய இடம் தான் அமமுக அலுவலகம். அந்த இடத்தில் வைத்து எப்படி பணம் கொடுக்க முடியும். அதிமுகவினருக்கு சொந்தமான அந்த காம்பளக்ஸில் வைத்து அதிமுகவினர் பணம் கொடுத்ததை முதலில் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தது எங்கள் வேட்பாளர் ஜெயகுமார் தான். ஆனால், பணம் கொடுப்பதை தடுக்காமல் காவல்துறையினர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு, எங்கள் கட்சியினரை அந்த இடத்தில் இருந்து கலைக்க தூப்பாக்கிச் சூடு நடத்தினர். ரூ. 2கோடி பணத்தை நாங்கள் வைத்திருந்தோம் என்று சொல்வதெல்லாம் கட்டுக்கதை” என்றார்.